சாலைகள் எங்கும் மரணக்குழி -
இங்கு
சாதியின் பெயரால் அரசியல்கள்
வேலைகள் இல்லா இளைஞர்படை - என்று
வெம்பி வெதும்புது தமிழ்நாடு.
சுயநலம் கயமை கையூட்டு - உடன்
சுரண்டலும் சேர்ந்து அரசாங்கம்
பயமிலை என்ற சொல்கூட - இங்கு
பயனற்று போனது மக்களுக்கு.
அரசியல் இங்கே தொழிலாச்சு - அது
ஆட்சி செய்பவர்கள் பணம்பார்க்க
தொழில்களில் எல்லாம் அரசியல்கள் - அது
தொழில் முனைவோரை பதம்பார்க்க.
பெற்று வளர்த்தவர்க் கிடமில்லை - என
புகுந்தகம் அனுப்பிடும் பிள்ளைகளும்
வெற்றி பெருவோம் எனச்சொல்லும் - இது
வேடிக்கை யான தமிழ்நாடு.
இந்த நிலையை மாற்றிடவே
இறைவா எனக்கொரு வரம்கொடு நீ
மந்தநிலை கொண்ட மடமனிதர் - எல்லாம்
மாண்டிடவே நல்ல சாபம்கொடு.
உறுப்பறுத்தெறியும் தைரியமும் - எங்கும்
உண்மையே பேசிடும் உளத்துனிவும்
கருத்தொறுமித்த நண்பர்களும் - கொடு
கட்டாயம் மாற்றுவோம் தமிழகத்தை
சாதியின் பெயரால் அரசியல்கள்
வேலைகள் இல்லா இளைஞர்படை - என்று
வெம்பி வெதும்புது தமிழ்நாடு.
சுயநலம் கயமை கையூட்டு - உடன்
சுரண்டலும் சேர்ந்து அரசாங்கம்
பயமிலை என்ற சொல்கூட - இங்கு
பயனற்று போனது மக்களுக்கு.
அரசியல் இங்கே தொழிலாச்சு - அது
ஆட்சி செய்பவர்கள் பணம்பார்க்க
தொழில்களில் எல்லாம் அரசியல்கள் - அது
தொழில் முனைவோரை பதம்பார்க்க.
பெற்று வளர்த்தவர்க் கிடமில்லை - என
புகுந்தகம் அனுப்பிடும் பிள்ளைகளும்
வெற்றி பெருவோம் எனச்சொல்லும் - இது
வேடிக்கை யான தமிழ்நாடு.
இந்த நிலையை மாற்றிடவே
இறைவா எனக்கொரு வரம்கொடு நீ
மந்தநிலை கொண்ட மடமனிதர் - எல்லாம்
மாண்டிடவே நல்ல சாபம்கொடு.
உறுப்பறுத்தெறியும் தைரியமும் - எங்கும்
உண்மையே பேசிடும் உளத்துனிவும்
கருத்தொறுமித்த நண்பர்களும் - கொடு
கட்டாயம் மாற்றுவோம் தமிழகத்தை
No comments:
Post a Comment