Monday, 2 September 2013

உழைப்பளிகள்

ஒட்டிய வயிரும் உடைந்தமுன் பல்லும்
கட்டித் தாரென கருத்த நிறமும்
கொண்ட எங்களிடம்
குடிசைகளே இல்லை..........
உழைத்த காசெல்லாம்
உணவிற்கே போதாத போது
கோவணத்தை அடகுவைத்தா
குடிசை கட்ட முடியும் ?

கொட்டிய மயிறும் குனித்த முதுகும்
வற்றிய குளமென வரண்ட கண்களும்
கொண்ட எங்களுக்கு
கவலைகள் ஏதுமில்லை....
வாங்கிய கடன்களே 
வரிசியில் நிற்கும் போது
கவலைகளை என்ன 
கந்துவட்டிக்கா வாங்க முடியும்?

வெற்றிமேல் வெறியும் வீழா மனமும்
மற்றவராயினும் வாழ்த்தும் குணமும்
கொண்ட எங்களுக்கு
கண்ணீரும் வருவதில்லை.....
உண்ட நீரெலாம் 
வியர்வையாய் வெளியில் வர
கண்ணீருக்கென தனியாக
தண்ணீர் பருகவா முடியும் ?
                                    
                                - ஏமாளி